June 19, 2021

 ஒற்றைத்தலைவலிக்கு நிரந்தரத்  தீர்வு.!!!


சூரியன் உதிக்கும்போது துவங்கி ஏறிக்கொண்டேபோய் சூரியன் மறையும்போது நீங்கும் தலைவலிக்கு சூர்யாவர்த்தம் என்று பெயர். இப்படி சூரியனோடு சம்பந்தமில்லாமல், சதா தலையின் ஒரு பக்கம் வலிக்கும் தலைவலிக்கு அர்த்தாவபேதம் என்று பெயர். இந்த இரண்டு வகை தலைவலிகளுக்கும் இது கைகண்ட மருந்தாகும்.

கீழா நெல்லி எனப்படும் கீழ்காய் நெல்லிச் செடியின் வேர்கள் ஐந்தை மாலை நேரத்தில் எடுத்து,அவற்றை இரவில் தண்ணீரில் ஊறப்போடவும். மறுநாள் காலையில் சூரியன் உதிப்பதற்கு முன்னால் அந்த வேர்களை தண்ணீரில் இருந்து எடுத்து லேசாக நசுக்கவும். ஒரு வாணலியில் அறுபது மில்லி நல்லெண்ணெயை ஊற்றி காய்ச்சவும். எண்ணெய் சூடானதும் நசுக்கிய வேர்களை போடவும். சடசடவென வெடித்து எண்ணெய் பொங்கும். பொங்கிவழியுமானால் தீயை குறைக்கவும். நுரை அடங்கியதும் மறுபடியும் தீயின் அளவைக் கூட்டவும். இப்படி நுரையெல்லாம் அடங்கி எண்ணெய் புகையக் காய்ந்த நிலையில் அடுப்பிலிருந்து இறக்கவும். கைபொறுக்கும்
சூட்டுக்கு எண்ணெய் ஆறியவுடன். கைநிறைய எடுத்து தலைஉச்சியிலிட்டு அழுத்தித் தேய்க்கவும். பத்து நிமிடம் கழித்து வெந்நீரில் குளிக்கவும். சாம்பிராணி புகையில் தலைமுடியை உலர்த்த வாய்ப்பிருந்தால் நல்லது. நினைவில் வையுங்கள், இவையனைத்தும் சூரியன் உதிப்பதற்குள் முடிக்கப்படவேண்டும். பிறகு சுடச்சுட புளி இல்லாத ரசம்
சாதம் அரைவயிறு சாப்பிட வேண்டும். மறுநாளும் இதைப்போன்றே செய்யவேண்டும். 
அவ்வளவுதான் தலைவலி போயே போச்சு!

ஒரு அனுபவ மருத்துவரின் பதிவு இது.  
நன்றி அவருக்கு